வண்ணங்கள் இல்லை எந்தன் வாழ்வில் ,
தினமும் நான் தோற்கிறேன் ...!!
காயங்கள் மட்டும் தான் கடவுள் வரமா ,
புது உலகை எதிர்பார்க்கிறேன் ...!
கடவும் களவானதே ,
கனவுகள் இருளானதே ..!
தேடியே உதிர் சருகாகின்றேன் ,
அறிகிலேன் திசைகள் தான் .!
வண்ணங்கள் வாழ்வில்லை ,
நல் எண்ணங்கள் வழிகாட்டும்
எதிர்கொள் துணையோடு
நாளை உனதே ..!
கால்கள் கட்டுண்டால்
கைகள் சிறகாக்கி
கடவின்றி பறந்தோடு ,
இப்பாரும் உனதே .!
கல் வலியில் அழுதால் சிலையும் உண்டோ ,
கலங்காதே
காலம் கனியும் .!
விழுப்புண் இல்லா வீரனும் இல்லை
எழு ..! நட.! மீண்டும் .! பறந்தோடு
No comments:
Post a Comment