இன்பம் உரியதல்ல என நினைத்தவர்களே,
எங்களுடனே எப்போதும் கல்லும் மண்ணும்,
இதயத்தில் கண்ணாமூச்சியும் இருக்கிறது.
ஊசி, பாசி, சீப்பு விற்று கிடைக்கும் பசியால்
வயிறு ரொப்பிக்கொண்டாலும்,
உலகமே நம்மை வாழ வைக்கிற துணைதான்.
நேற்றைய தாயக்கட்டைப் போட்டியில் தோற்றுத் துவண்ட
தம்பி தர்மனிடம் சொன்னேன்:
"மனைவியை இழந்த முதல் கணவன் நீ அல்ல—
இந்த சாலையோரத்தில் பலரின் கதை அதுவே…"
அவன் கண்களில் ஒரு கணம் வலி துடித்தது,
ஆனால் அடுத்தக் கணம் கை நடுங்கினாலும்,
தாயக்கட்டை மீண்டும் எறிந்தான்.
வாழ்க்கை எங்களை வீழ்த்தி விட்டு விளையாடிக்கொண்டாலும்,
மீண்டும் மலை ஏறி வெல்லும்
வீரம் என்றும் உள்ளது.
நாளைய விடியல் எங்கே வந்து சேருமோ
என்று தெரியாது;
ஆனால் தாயக்கட்டையைத் திருப்பும் தைரியம்
எங்கள் இதயத்தில் எப்போதும் இருக்கும்.
No comments:
Post a Comment