Tuesday, September 15, 2009

பதில் சொல்லடி ?????

கண்களிலே குடியிருந்தேன்
கண்ணீராய் கழுவிவிட்டாய் ???

மூச்சினிலே கலந்து வந்தேன்
தும்மலாய் எனை துரத்திவிட்டாய் ???

காலடியில் நான் கிடந்தேன்
கால் கழுவி ஓடவிட்டாய் ????

உன் இதயத்தில் இனி இருப்பேன்
உயிர் விட்டா எனை அழிப்பாய் ?????????????

வகுப்பறை சுகமானது

வகுப்பறை சுகமானது,
தடாகத்தில் தாமரை போல்
சகாக்களுடன் நான் ,

வகுப்பறை சுகமானது
இரவெல்லாம் தூங்கினாலும்
ஆசிரியரின் தாலாட்டு ,

வகுப்பறை சுகமானது
கனாக்களில் நான் கண்டது போல்
கண் முன்னே அவள் புன்சிரிப்பு ,

ஆம் வகுப்பறை சுகமானது
என் செய்வதென்று அறியாது
கவிதை போல் இதை கிறுக்கியது !!!!!!!!!

டம்ளர்

வராத நீருக்கு என்னை
கைது செய்துவிட்டனர் !!!
- நீர்பானையில் சங்கிலியுடன்

அவலம்

மந்தை மந்தையாய்
மாடுகளை பார்த்திருக்கிறேன் ,

ஆனால் மந்தையாய் மனிதர்களை
இன்று தான் காண்கிறேன் அகதிகள் விடுதியில் ,

எங்கள் நிலத்தில் சுதந்திர ஓலம் ,
நாங்கள் கேட்பது எத்துனை அவலம் ,

வாழத்தான் விடவில்லை ,
நாங்கள் செல்ல வழியாவது விடு !!!!!!!

என் உயிர்

என் உயிர் உனக்கு தான் என்பதாலோ ,
அதை துளி துளியாய் எடுக்கிறாய் ...!!!

சிகரெட்

சிகரெட் புகையில்
சித்திரமாய் தெரிகிறது
என் தந்தையின் உழைப்பு !!!

Monday, September 14, 2009

நம் புது உலகம்

விழித்திடு மனிதா விழித்திடு
படைத்திடு புது உலகை படைத்திடு

தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் என்பதோர் கூற்று ,
தடுமாறும் தர்மத்தின் தலைவிதியை மாற்று ..!

காட்டுக்குள் பல்வேறு புலிகளும் உலவும்
நம் நாட்டுக்குள் பிணமாக பல புலிகளும் நிலவும் !!

குடிக்கின்ற நீரை நீ காவிரியில் தடுத்து ,
கொதிக்கத்தான் வைக்க கொடுக்கிறாய் எரிவாயு அடுப்பு !!!

பல்வேறு இலவசங்கள் நீ இங்கு கொடுத்தாலும் ,
ஏமாறமாட்டோம் இனி உன் வீட்டு சதியில் ..!!

தமிழென்ன தெலுங்கென்ன மொழிகள் இங்கு வேண்டாம் ,
கைகோர்த்து புது உலகை இங்கு படைப்போம் .!!

கருபென்ன வெளுப்பென்ன நமக்குள்ளே நிறங்கள் ,
வெளுப்பான எதிர்காலம் நாம் இங்கு படைப்போம் !!!

கீழ்சாதி மேல்சாதி பிரிவினையை தடுத்து ,
ஒன்றான மனிதன் எனும் சாதியை முன் நிறுத்து !!

வயதான தலைவர்கள் இனி நமக்கிங்கு வேண்டாம் ,
இளரத்தம் பாய்ச்சி புது உலகம் படைப்போம் .!!!


விழித்திடு மனிதா விழித்திடு
படைத்திடு புது உலகை படைத்திடு

Sunday, September 13, 2009

பொருளாதாரம்

பன்மாடி கட்டிடங்களின்
வாயிலில்
படுகுழியாய்
கிடக்கிறது !!!!!!!

பதுமை

பெண் மோகம்
பொல்லாதது
ஏனெனில்
பெண்கள் வெறும்
போலி பதுமைகள் !!!!!!!!!!!

பெண் கவிதை

கள்ள வித்தைகளை
கற்றவள் என்பதாலோ
பெண்களை கவிதை
என கூறுகிறார்கள் !!!!!!!!!!!

பெண்

நிறைமதியும்
பாதியில் மறைந்துவிடுவது
பெண் என்பதாலோ !!!!

நாத்திகன் !!!



இல்லாத கடவுளை
நாங்கள் தேடுகிறோம் என்றால் ,
இருக்கும் எதை
நீ தேடுகிறாய் !!!

Friday, September 11, 2009

உன் காதல்

உன் ஸ்பரிசம் பட்ட நொடி முதல் மூர்ச்சையாய் இருக்கிறேன் ,

கண் விழித்தால் நீ அவனோடு இருப்பாய் என்பதால் ...!!!!!!