வகுப்பறை சுகமானது,
தடாகத்தில் தாமரை போல்
சகாக்களுடன் நான் ,
வகுப்பறை சுகமானது
இரவெல்லாம் தூங்கினாலும்
ஆசிரியரின் தாலாட்டு ,
வகுப்பறை சுகமானது
கனாக்களில் நான் கண்டது போல்
கண் முன்னே அவள் புன்சிரிப்பு ,
ஆம் வகுப்பறை சுகமானது
என் செய்வதென்று அறியாது
கவிதை போல் இதை கிறுக்கியது !!!!!!!!!
No comments:
Post a Comment