Monday, September 14, 2009

நம் புது உலகம்

விழித்திடு மனிதா விழித்திடு
படைத்திடு புது உலகை படைத்திடு

தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் என்பதோர் கூற்று ,
தடுமாறும் தர்மத்தின் தலைவிதியை மாற்று ..!

காட்டுக்குள் பல்வேறு புலிகளும் உலவும்
நம் நாட்டுக்குள் பிணமாக பல புலிகளும் நிலவும் !!

குடிக்கின்ற நீரை நீ காவிரியில் தடுத்து ,
கொதிக்கத்தான் வைக்க கொடுக்கிறாய் எரிவாயு அடுப்பு !!!

பல்வேறு இலவசங்கள் நீ இங்கு கொடுத்தாலும் ,
ஏமாறமாட்டோம் இனி உன் வீட்டு சதியில் ..!!

தமிழென்ன தெலுங்கென்ன மொழிகள் இங்கு வேண்டாம் ,
கைகோர்த்து புது உலகை இங்கு படைப்போம் .!!

கருபென்ன வெளுப்பென்ன நமக்குள்ளே நிறங்கள் ,
வெளுப்பான எதிர்காலம் நாம் இங்கு படைப்போம் !!!

கீழ்சாதி மேல்சாதி பிரிவினையை தடுத்து ,
ஒன்றான மனிதன் எனும் சாதியை முன் நிறுத்து !!

வயதான தலைவர்கள் இனி நமக்கிங்கு வேண்டாம் ,
இளரத்தம் பாய்ச்சி புது உலகம் படைப்போம் .!!!


விழித்திடு மனிதா விழித்திடு
படைத்திடு புது உலகை படைத்திடு

No comments:

Post a Comment