என் தோட்டத்து ரோஜா என்றாலும் , அதில் இத்தனை முட்கள் தான் ஏனோ ? என் இதயம் உனக்கு தான் என்றாலும் அதில் இத்தனை கீறல்கள் தான் ஏனோ ?? இந்த வலியும் சுகமாகிறது , உன் வாசத்துடன் துடிப்பதால்!!!!!
மெய் மறந்து, மெய் இருட்டை ரசித்து கொண்டிருந்தேன் . விண்ணில் ஒரு நட்சத்திரம் குறைவதாய் தெரிந்தது, மண்ணில் தேடினேன் கிடைக்கவில்லை, இதோ கிடைத்துவிட்டது ,அது இருப்பதோ என் மனதில் !!! - நீரு
பாலுண்ட முலையதனில் கல்லென்று தெரிந்ததனால் , என் செய்வதென்று அறியாமல் , திக்கேதும் தெரியாமல் , முடங்கிப்போய் கிடக்கின்றேன்.!! என் வாயின் நஞ்சதனால் , ஏதேனும் வந்ததுவோ !! மன்னித்து விடு நீ என்னை , செய்நன்றி மறந்துவிட்டேன் ,, என் செய்வதென்று நீயே சொல் .? நீ என்னிடமே வந்துவிடு !! என்னுடனே இருந்துவிடு!!!