Saturday, January 9, 2010

மன்னித்தது விடு அன்னையே !!

பாலுண்ட முலையதனில் கல்லென்று தெரிந்ததனால் ,
என் செய்வதென்று அறியாமல் ,
திக்கேதும் தெரியாமல் ,
முடங்கிப்போய் கிடக்கின்றேன்.!!
என் வாயின் நஞ்சதனால் ,
ஏதேனும் வந்ததுவோ !!
மன்னித்து விடு நீ என்னை ,
செய்நன்றி மறந்துவிட்டேன் ,,
என் செய்வதென்று நீயே சொல் .?
நீ என்னிடமே வந்துவிடு !!
என்னுடனே இருந்துவிடு!!!

No comments:

Post a Comment