Friday, January 8, 2010

திருப்தி

முப்பது ரூபாய் பொன்னி பணக்காரனுக்கு கொடுக்காததை ,
இரண்டு ரூபாய் ரேஷன் அரிசி கொடுத்தது ஏழைக்கு ..!!!!

பத்து சவரன் பொன்நகை மாமியாருக்கு கொடுக்காததை ,
பதுசான புன்னகை கொடுத்தது தாய்க்கு ..!!!

இருபது சென்டிமீட்டர் மழை ஆலமரத்துக்கு கொடுக்காததை ,
இளகிய பனிதுளி கொடுத்தது புல்லுக்கு ..!

No comments:

Post a Comment