கண்மூடி திறக்கும் ஒவ்வொரு நொடியும் பலகோடி பொருட்செலவில் கண் மயக்கும் பல விளம்பரங்கள் தான் நம் வாழ்வை இன்று இழுத்துச் செல்கிறது .ஊடகங்கள் தங்கள் செய்திகளை இன்று விலைக்கு கூவி விற்றுகொண்டிருகின்றன .ஊடகம் கண்டுகொள்ளத , விளம்பரங்கள் இல்லாத ஒரு மிகப் பெரிய சமூகம் யாரும் நினைக்க முடியாத அளவுகளில் கோடிகளில் சம்பாதித்து வியாபாரம் செய்து கொண்டிருகின்றன .
யார் அவர்கள் . நமக்குள் சட்டை பாக்கெட்டில் ஒருவராய், நம் வீட்டுசுவர் சித்திரமாய் , பணமுடிச்சுகளின் ஆசிர்வாதமாய் , வியாதிகளின் மருந்துகளாய், கார் வண்டிகளில் தொங்கும் பொம்மைகளாய் , புத்தக பக்க குறியீடுகளாய் , திரு திரு திருவாளர்கள் , பிரம்மானந்தத்தை விட காமெடியில் கலக்கும் ஆனந்தாக்கள் இவர்கள் . நம் பாபாக்கள் . இங்கு இவர்களுள் நடக்கும் அருமையான போர் தான் , பாருக்குள்ளே நல்ல பாபா .
பாட்டி வைத்தியம் பழையது என்றும் பாபா வைத்தியம் புதிது ஊர் சொல்லி கேள்வி . கண்மூடி கையில் சாம்பல் கொடுத்தால் தீர்க்கும் புற்றுநோய்கள் ஏதோ இப்போ இந்தியாவில் பரவுகின்றது . வெள்ளை ஜிப்பாக்கள் 'கச கச கச கச' என புனித நீர் தெளித்து, உடம்பினில் இருக்கும் 274 வியாதிகள் தீர்வதை பார்த்தால் 'எல்லா வியாதிக்கும் ஒரே மருந்து ' என நடிகர் விவேக் பட காமெடி தோற்றுவிடுகிறது .
சமத்துவத்தை காண முடிகிறது இந்த நகைச்சுவை நாயகர்களிடம் . சமயம் கடந்து எல்லா வகையிலும் இவர்கள் சுற்றி திரிகிறார்கள் . 5 ஆண்டு காலம் அரசியல் வாதிகளும் ஓய்ந்தாலும் , அவர்களையும் தாண்டி சீயான் விக்ரம சொல்வது போல் 'அதுக்கும் மேல' இவர்கள்.
'தனது வாழ்வின் லட்சியத்தைக் குறித்த விழிப்புணர்வு இல்லாதபோது, தனது அடையாளம் குறித்த விழிப்புணர்வு இல்லாதபோது, தேசத்திற்கு எதிரான சக்திகள் நாட்டின் உள்ளும் புறமும் இருந்து ஏற்படுத்தும் ஒவ்வொரு தள்ளுமுள்ளுக்கும் உள்பட்டு தனி ஒரு மனிதனோ / ஏன் தேசமோ தனது பாதையிலிருந்து விலகி விலகிச் செல்வது வெளிப்படையானதே.' இதை எங்கோ படித்திருக்கிறேன்
இன்று இந்த அணைத்து சமய குருமார்களும் அழகான வரையறுக்கப்பட்ட திட்டங்களுடன் செயல் படுகிறார்கள். வழிதவறி வந்த வாஸ்கோ ட காமா கூட அற்பமாய் நம்ம நாட்டு தானியங்களும் மசாலாக்களும் தான் திருட வந்தான் என வரலாறு உண்டு . அவனை போல் வடஇந்தியாவில் பொட்டலங்கள் பன்னாட்டு விற்பனை இவர்கள் நடத்துவதாக வதந்தி .
ஒரு காணொளியில், ஒரு டம்ளர் தண்ணீர் வைக்கிறார்கள் . அதனை வீடியோ எடுக்கிறார்கள், அதன் மூலக்கூறு இயக்கத்தை பதிவு செய்கிறார்கள். நீர் மூலக்கூறுகள் என்பதால் அவை சிதறிகிடக்கின்றன
அடுத்து தான் நாம் மிகவும் எதிர்பார்க்கும் , இந்தியாவிலேயே , உலகிலேயே முதல் முறையாக , திரைக்கு வந்து.. அயய்யோ இல்லை, முதல் முறையாக நம் நாயகர் ஒரு பிரபல சுவாமிஜி வருகிறார் . கண்ணை மூடி அந்த டம்ப்ளரை ஆசிர்வதிக்கிறார் . அய்கோ என்ன ஆச்சர்யம் வானம் பொழிகிறது , பூமி விளைகிறது .. இவர் அல்லவோ மகான் . நீரின் மூலகூற்றினை பார்த்தல் , அனைத்தும் ஒன்றின் பின் ஒன்றாக வரிசையாக இருக்கிறது . விஞ்ஞானி அவர் கால்களில் விழுகிறார் .
அந்த புனித நீருக்காக ஆசிரமத்தில் கோடிகணக்கானோர் . அந்த ஆச்சர்ய ஆசாமி இன்று ஜாமீனில் இருப்பது வேறு கதை . சட்டம் வேறு சமயம் வேறு . மக்கள் நம்புகின்றனர் , மக்கள் குறைகள் இங்கே உருவாக்கப்பட்டு தீர்த்துவைக்க படுகிறதை அவர்கள் இன்னும் உணரவில்லை .
முக்கிய செயற்கைக்கோள் சேனல்கள் இவர்களின் விடியற்காலை முதல் விளக்கணைக்கும் வரை கேள்வி பதில் நிகழ்சிகளை ஒளிபரப்புகின்றனர் . மண்ணாசை முதல் பெண்ணாசை வரை , பல் வலி முதல் பிரசவம்
வரை , ஆன்மீகம் முதல் அரசியல் வரை, போஸ்டர் சண்டை முதல் பம்புசெட்டு சண்டைகளுக்கும் கூட இவர்களால் நிவாரணம் குடுக்க முடியும்.
இந்திய கடவுள்கள் பரவாயில்லை குடிசை யோகிகளை அரண்மனை யோகிகளாய் மாற்றுகிறார்கள் , வெளிநாட்டு கடவுள்கள் இந்த தூதர்களுக்கு விமான பரிசெல்லாம் கொடுக்க சொல்கிறார் என முகபுத்தக பதிவுகளில் பார்க்கமுடிகிறது .
கறுப்புபணப் புழக்கத்தின் புகலிடம் இவர்கள் தான் என்று நான் சொல்லவில்லை. தேசங்கள் கடந்து எல்லா குறுந்தீவுகளில் இவை அழகாக அடுக்கி வைக்கபட்டிருக்கலாம் என்று யாரோ சொல்லி கேள்வி .
பல்லாயிரம் ஆண்டுகளாய் இறை வணக்கம் செய்யும் மக்களுக்கு இவர்கள் அப்படி என்ன தான் சொல்லிதருகிறார்களோ. தமிழ் திரைப்பட அமெரிக்க மாப்பிள்ளை போல கடைசியில் வெறும்கையுடன் திரும்புவது என்னவோ நம் மக்கள் தான் .
ஆனந்தம்..! பரமானந்தம் ..!
No comments:
Post a Comment