Wednesday, February 15, 2012

நிறை


கண்முன்னே ஆடும் பல வண்ணத்திரைகள்,

மிரட்சியோடு ஓடும் மனக்கற்பனைக் குதிரைகள்,

அடங்காமல் கரைமோதும் நீலக்கடல் நுரைகள்,

கண்சிமிட்டும் நேரம் தனில் அவள் கார்குழலில் நரைகள்,

கை அளவன்றோ என் ஆயுட்குறைகள்,

உலகளவன்றோ நம் வாழ்வில் நிறைகள்

குறை மறந்து நிறை நினைத்தால் நீளும் நம் வாழ்நாட்கள்..!


 

சுகமான சோகங்கள்

காதல் ஒரு அழகான உணர்வின் பெயர் ,
           காதலி உணர்வற்ற ஓர் அழகிய உயிர்,

காதல் என்பதோ முற்றுமாய் மெய்,
          காதலி என்பவள் முழுவதுமாய் பொய்,

காதல் அழகான உணர்வுகளின் மிகுதி,
          காதலி சுகமளிக்கும் உணர்வுகளில் ஒரு பகுதி,

காதல் - ஆண் மனம் லயித்த இன்பம்,
          காதலி தான் மனம் கசந்த துன்பம்,

காதல் அழிவதில்லை கலங்காதே மானிடா,
        காதலி நிலைப்பதில்லை கவலை உனக்கு ஏனடா ?!!

நடுநிலை

அட்டைப்பெட்டி அடுக்குகளாய் பல மாடிக்கட்டிடங்கள்,

கத்தை நோட்டுகள் கட்டிக் காப்பவனும் ,
கந்தல் வேட்டிகொண்டு காலம் கழிப்பவனும்,

நிதி மிஞ்சிய கோலம் வீட்டினுள் நீச்சல் குளம் ,

விதி கெஞ்சும் அவலம் வீடுகளின் இடையே கழிவுக்குளம்,

பாவம் என்று அரசளித்த ஹௌசிங் போர்டு ஒருபுறம்,போனால் போகட்டும் என ஆசையாய் பரிசளித்த ஹௌசிங் வில்லாக்கள் மறுபுறம்,

நன்மையை நடுநிலையை பகிர்ந்தளிக்கும் கடவுளுக்கு நன்றி ,
என்னை நடுத்தரமாய் படைத்து இதனை காட்டியதற்கு..!

காதல் நட்பு

நட்பினில்
அன்பென்னும்
இன்பத்துப்பாலின் மிகுதி,
சுவையான   வெளிர்    நுரையாய்
--  கபடமில்லா காதல்
 என்னுள்ளும் உன்னுள்ளும்..!

காதல் காளான்

இஷ்டமாய் உடன் சுற்றிய நட்பெனும் ஆலமரமும்,
கண்ணில் இருந்து
சிலநேரம் மறைக்கப் படுகிறது,

புதியதாய் காதல் காளான்
கால்சுற்றி முளைப்பதனால்..!

Tuesday, February 14, 2012

கேட்டால் கொடுத்த பூமி(2)

விஞ்ஞான வளர்ச்சியில் சுழலும் ஞாலம்,
            அஞ்ஞான முதிர்ச்சியில் கிட்டும் மெய்ஞானம்,
நேர்வழிச்செல்ல அறிவியல் நல்வழிகள்,
           தீவழிச்செல்லும் அறிவிலிப் பேர்வழிகள்,
செய்வதறியா ஸ்தம்பிக்கும் எட்டுத் திக்குகள்,
          செவ்வனே நிகழும் கொடும்பாவித் தீங்குகள்,

நல்லதை நாடியே நகரும் சிலப் பேதைகள்,
         நல்லதின் பேர்சொல்லிப் பேரின்பா போதைகள்,

நியாயத்தராசில் காலியாய் இருதட்டும் ,
        அநியாய எடைக்கற்கள் அதன் மீது கரை முட்டும்,

மனிதனே என்னை நீ மறந்திடவும் வழியுண்டோ,
         பூமகளும் பூமகளாய் வாழத்தான் வழியுண்டோ

கேட்டால் கொடுத்த பூமி(1)

இருட்டு என்றாய் ஆதவன் கொடுத்தேன்,
    வெயில் என்றாய் வனங்களை கொடுத்தேன்,

தாகம் என்றாய் நதிகளை கொடுத்தேன்,
   தனிமை என்றாய் உடன் மற்றினங்களை கொடுத்தேன்,

சிந்தனை என்றாய் ஞானம் கொடுத்தேன்
  மறதி என்றாய் விஞ்ஞானம் கொடுத்தேன்,

ஞானம் வளரவும் , ஞாலம் பெருகவும் ,
கொடுத்ததை எல்லாம் முற்றுமாய்க் கெடுத்தாய்,

செய்வது சரியா எனக் கடல் சீற்றமாய்க் கேட்டேன் ,
நான் 'மனிதன்' என்றே உரக்கச் சொன்னாய்,

நன்றி மறப்பவன் மனிதன் என்பது அனைவரும் அறிந்தக் காலச்சுவடு.
பூமியை மட்டும் பூமியாய் வாழ, மறந்தே போயும் சிறிதாய் வழிவிடு :(

தாராளத் தமிழன்

தவிக்கிறேன் நான் தாராள தமிழன் ,

வடபுறம் கைகூப்பிக் கிருஷ்ணாவில் நீர்க்கேட்டேன்,
கண்ணன் அவன் கருமையில் கொடிகாட்டிக் கைவிரித்தனர்,


கிழக்கின் எதிர்த்திசையில் காவிரியில் கையேந்தினேன்,
வருணன் பொய்த்தப்பின் கடனாய்த துளி அளித்தனர் ,

தெற்கே முல்லையின் பெரியாற்றில் செருக்காய் சிரித்திருந்தேன்,
முள் வெளித் தடுப்பணையால் சிற்றாறாய் சிறகொடித்தனர்,

வங்கக்கடல் நோக்கி ஈழத்தின் திசைப் பார்த்தேன்,
செங்கடல் குருதியின் நாற்றம் நான் நுகர்ந்தேன்.

நீர் மறந்து மேல் நோக்கி கடவுளின் பால் கை சேர்த்தேன், கீழ்நோக்கி மிதக்கிறேன் ஒரு வழியாய் கானல் நீர் கண் பட்டதனால்..!

கார்முகில்

சுவையான
கண்ணீர் துளியாய் பொழிகிறேன்
இரட்டிப்பு மகிழ்ச்சி,
என்னவள் உன்னுடன் இருப்பதால் ..!

தமிழா தலைநிமிர் :

* பழமை மரபினை தேடிப்போ, பாழ் புதுமைப் உளறல்களை சாடிப்போ.
*தாய்த்தமிழை என்றும் மறவாதே, பன்னாட்டு மோகப்பேயை மறந்தும் மதியாதே.

* தமிழ் மொழி நம் நெஞ்சம் தனில் வாழட்டும், பிற மொழிகள் நம் நாவோடே வீழட்டும்..

* பிறமொழிகள் காதுக்கு வெறும் ரீங்காரம், தமிழ்மொழி என்றால் மனம்தனிலே ஆங்காரம்..

* பிற மொழி கற்றால் வெறும் திறனாகும், நம் தமிழ்மொழி பற்றுதல் வரமாகும்.

கைக்குட்டை

என்னவள் புன்முறுவல் சிதறல்களையும்,
விழித்திரை நீர் முத்துகளையும்
தன்னிடமே சுமக்கும்
கடவுளின் படைப்பு.
  - உன் கைக்குள் அடிமையாய்






கைப்பேசிக்கனவுகள்

என் குரல் பிடித்துவிட்டது போலும் உன் தொலைபேசி மைய அதிகாரிக்கு,

  அவளே பேசுகிறாள் உன்னை துண்டித்துவிட்டு..
காத்திருந்து பார்த்தேன் கடைசியிலாவது நான் என்று ..
 நீண்ட வரிசை திசை மாறிவிட்டது போலும்,
மரத்துப் போன பழமையின் பூரிப்பில் நான்,
 என்னை மறைத்துப் போன புதுமையின் பூரிப்பில் நீ ..!
குறும்செய்தியாவது உன்னிடம் புன்முறுவல் உதிர்க்கும் என்று ,
 கைப்பேசியோடு  கனவில் கரைகிறேன்..!

இதமான இதயம்

காற்றின் குளுமையும் இதமாய் அணைக்கிறது


    என்னவள் உன் சுவாசம் கலந்ததாலோ,

என் இதயமும் இரட்டிப்பாய் துடிக்கிறது

    நீயும் என்னுள் கரைந்ததாலோ,

காற்றினில் கரைந்து நம் காதல் ,

   என் நெஞ்சினில் உரைந்ததடி..!



சுவை

உன்


விழியோரம்

கசியும் நீரை,

என் இதழ்களில் தாங்கினேன்,

சுவைத்தது தித்திப்பான காதல் கரிப்பாய்..!

ருசித்தும் அறிகிலேன் காதலின் சுவையை ..!

சந்தேகம்

கண் மை முகம் பரப்பி,


நட்சத்திர பொட்டிட்டு,

சிரிப்பினில் குளிரூட்டி,

வனப்பினில் சூடேற்றி,

நீ வளர்ந்து என் மனதை உன்னுள் உருகவைத்து,

நம் உறவு தேய்ந்து என்னை உரையாவைத்தாயே,

பெண்ணே மெய் சொல் ,

நீயும் வெண்மதியும் உடன்பிறப்போ ???

உறக்கம்

இரவுத்தூக்கம் தவிர்த்து


உனக்கு குறும்செய்தி அனுப்பியதன் பலன்,

என்னவள் நீ எனக்கு

பகல் கனவாகிவிடக் கூடாது என்பதனால் தானடி..!:)

என்னை உன்னிடம் விட்டு உறங்கச் செல்கிறேன் , நீ உன்னுடனே என்னை வைத்துக்கொள்வாய் என்பதனால் ..!!