Wednesday, February 15, 2012

சுகமான சோகங்கள்

காதல் ஒரு அழகான உணர்வின் பெயர் ,
           காதலி உணர்வற்ற ஓர் அழகிய உயிர்,

காதல் என்பதோ முற்றுமாய் மெய்,
          காதலி என்பவள் முழுவதுமாய் பொய்,

காதல் அழகான உணர்வுகளின் மிகுதி,
          காதலி சுகமளிக்கும் உணர்வுகளில் ஒரு பகுதி,

காதல் - ஆண் மனம் லயித்த இன்பம்,
          காதலி தான் மனம் கசந்த துன்பம்,

காதல் அழிவதில்லை கலங்காதே மானிடா,
        காதலி நிலைப்பதில்லை கவலை உனக்கு ஏனடா ?!!

1 comment:

  1. அருமையான கவிதை நண்பரே.....
    தாங்கள் எனது வலைப்பூவின் வாயிலாக என்னோடு தொடர்புகொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete