Tuesday, February 14, 2012

கேட்டால் கொடுத்த பூமி(2)

விஞ்ஞான வளர்ச்சியில் சுழலும் ஞாலம்,
            அஞ்ஞான முதிர்ச்சியில் கிட்டும் மெய்ஞானம்,
நேர்வழிச்செல்ல அறிவியல் நல்வழிகள்,
           தீவழிச்செல்லும் அறிவிலிப் பேர்வழிகள்,
செய்வதறியா ஸ்தம்பிக்கும் எட்டுத் திக்குகள்,
          செவ்வனே நிகழும் கொடும்பாவித் தீங்குகள்,

நல்லதை நாடியே நகரும் சிலப் பேதைகள்,
         நல்லதின் பேர்சொல்லிப் பேரின்பா போதைகள்,

நியாயத்தராசில் காலியாய் இருதட்டும் ,
        அநியாய எடைக்கற்கள் அதன் மீது கரை முட்டும்,

மனிதனே என்னை நீ மறந்திடவும் வழியுண்டோ,
         பூமகளும் பூமகளாய் வாழத்தான் வழியுண்டோ

2 comments:

  1. "நியாயத்தராசில் காலியாய் இருதட்டும் ,
    அநியாய எடைக்கற்கள் அதன் மீது கரை முட்டும்,.."
    சிறப்பான வரிகள்.
    வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. மனித நேயம் தழைத்தோங்கும் இடமெல்லாம்
    பூமகளும் புன்னகை பூத்தே வாழ்ந்திடுவாள்.
    தனித்திருந்து சாதிக்க‍ நீ பிறந்தாய்,
    பூமி நலம்பெறவே மாறிடு நீ நெருப்பாய்
    தனி உடைமை உடைத்தெறிந்திடவே
    கனிவுடன் வேண்டுகிறேன் வாரீர்!

    - விதை2விருட்சம், ராசகவி, ரா.சத்தியமூர்த்தி

    ReplyDelete