சரவணன் சந்திரன் எழுதிய 'பாவத்தின் சம்பளம்' படித்துக்கொண்டிருக்கிறேன் . 8ஆம் அத்தியாயம்மிக முக்கியமான செய்தியை பிரதிபலிக்கிறது . காதலித்து மணந்த கணவன் மனைவி விவாகரத்து செய்துகொண்டதற்கு முக்கியமான ஒரு காரணம், மனைவியின் அலுவலகத்தில் அவளுடைய கணவன் இசை ஆர்கெஸ்டராவில் பணிபுரிவதை கேலிபேசியது என விளக்கியிருந்தார் . அதன் கடைசி பத்தியில் கூறிய வார்த்தைகள் மிகக்கூர்மையானவை.
//அவ்வளவு நாள் அழகாகக் காட்டிய முகம் பார்க்கிற கண்ணாடி உடைவதற்கு பெரிய பாறாங்கற்களெல்லாம் தேவையே இல்லை.மணல் துகளையொத்தது என ஏளனம் கொள்ளும்படியான சிறுகல் கூட போதும்.உடைசல் என்பது வந்து மோதும் எதிர்பாராத கூர்மையான வேகைத்தை பொறுத்தது //"
இது நிதர்சனமான உண்மை . நம்மில் பல பேர் பேச்சு வழக்கில் பிறரிடம் , எவ்வளோ 70மதிப்பெண் தானா உன் குழந்தை (கல்வியை எடை போடாதே முட்டாளே),
என்ன 31வயசாகப்போகுது உன் பையன் இன்னும் படிக்கிறானா ?(கல்லாதது உலகளவு)
'எப்படி 70000 சம்பளம் போதும் இருக்கிற விலைவாசில?'(100லும் , 1000த்தில் வாழ்பவன் இருக்கிறான்),
'என்ன இன்னும் சொந்தமா வீடு வாங்களையா ?'(தங்க இடம் இருந்தால் போதும்) ,
' கல்யாணம் ஆகி மூணு வருசமா பிள்ளை பிறக்கலையா ?'(வேணும் போது பெத்துப்பாங்க) , 'என்னதான் இருந்தாலும் படிச்ச பொண்ணுனு உன் மருமகளுக்கு திமிறுஇருக்கும்'(படிச்சதால தான் முகத்துக்குநேரே பதில் சொல்லுறா,இல்லாட்டி உன்ன மாதிரி புறம்பேசுவா),
'மாப்பிள்ளை வெளியூர் சுத்தினாலும் இன்னும் உன்ன உள்ளூரே சுத்திக்காட்டால'(ஓடுற வயசு உழைக்கிறான்) ,
'கடன் வாங்கியாது கார்ல போகணும் சார் அது தான் பெருமை'((அமரர் ஊர்தி போலாமா ?). இப்படியாக அலுவலகத்தில் தேநீர் நேரத்தில் , சிகையழகு நிலையத்தில் முகச்சாயம் பூசுகையில் , சிறைவைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் ஒற்றையடி புல்வெளி பாதைகளில் மாலை நடைப்பயணத்தில் புரளி பேசிச்செல்லாதீர்கள். காலம் 70களில் இல்லை. தனிமனித எதிர்பார்ப்புகள் அதிகரித்து விட்டன . ஒப்பீடு இன்றைய இளையர்களின் ஆழ் மனதில் தாக்கங்கள் ஏற்படுத்துகின்றன. நம்மில் ஒவ்வொருவரும் பேசநினைக்கும் ஒற்றைச்சொல்லையும் கூட மனதுக்குள் ஒத்திகை பார்த்து , நம்மையே அதில் ஒப்பிட்டுப் பார்த்து கூறவேண்டும். சமகால நண்பர்கள் இதைப் போன்ற வெட்டி பேச்சுச்களில் இருந்து தப்பித்து மனஅமைதி அடைந்திடுங்கள்.
#ஒருவாழ்க்கைஉனக்காக வாழ்ந்திடு
No comments:
Post a Comment