என் தோட்டத்து ரோஜா என்றாலும் ,
அதில் இத்தனை முட்கள் தான் ஏனோ ?
என் இதயம் உனக்கு தான் என்றாலும்
அதில் இத்தனை கீறல்கள் தான் ஏனோ ??
இந்த வலியும் சுகமாகிறது ,
உன் வாசத்துடன் துடிப்பதால்!!!!!
என் கிறுக்கல்களை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்..!
Wednesday, April 14, 2010
அழகு
வெண்மதி என்னை பார்த்து சிரித்தாள்
என் அழகை ரசிக்கிறாயா என்று ,
அவளை பார்த்து நான் சிரித்தேன்
நீ என் மஹாவை பார்த்ததில்லை என்று!!!!!
என் அழகை ரசிக்கிறாயா என்று ,
அவளை பார்த்து நான் சிரித்தேன்
நீ என் மஹாவை பார்த்ததில்லை என்று!!!!!
என் நட்சத்திரம்
மெய் மறந்து, மெய் இருட்டை
ரசித்து கொண்டிருந்தேன் .
விண்ணில் ஒரு நட்சத்திரம் குறைவதாய் தெரிந்தது,
மண்ணில் தேடினேன் கிடைக்கவில்லை,
இதோ கிடைத்துவிட்டது ,அது இருப்பதோ என் மனதில் !!!
- நீரு
ரசித்து கொண்டிருந்தேன் .
விண்ணில் ஒரு நட்சத்திரம் குறைவதாய் தெரிந்தது,
மண்ணில் தேடினேன் கிடைக்கவில்லை,
இதோ கிடைத்துவிட்டது ,அது இருப்பதோ என் மனதில் !!!
- நீரு
ஓரினச்சேர்க்கை
மனதாலும் பிரிவில்லை,
பாலாலும் பிரிவில்லை,
வாழத்தான் முடியவில்லை,
வாழ்ந்தாலும் பயனில்லை,
இணைந்துவிட்டோம் மனதளவில்,
இவ்வுறவை புரிய வைத்தோம் பார் அளவில்.!!!!!!!!
பாலாலும் பிரிவில்லை,
வாழத்தான் முடியவில்லை,
வாழ்ந்தாலும் பயனில்லை,
இணைந்துவிட்டோம் மனதளவில்,
இவ்வுறவை புரிய வைத்தோம் பார் அளவில்.!!!!!!!!
என் கவிதை
உன் பெயரை தாளில் எழுதவும் பயமாய் இருக்கிறது ,
என் கவிதையை யாரேனும் படித்து விடுவார்களே என்று !!!
என் கவிதையை யாரேனும் படித்து விடுவார்களே என்று !!!
Saturday, January 9, 2010
இலங்கையில் தமிழர்கள்
உண்ண உணவில்லை ,
உடுத்த உடையில்லை ,
நிற்க நிலமில்லை ,
ஓட பலமில்லை ,
சொந்த நிலத்தில் அகதிகளாக நாங்கள் ,
வந்த இடத்தில் அரண்மனையில் நீங்கள் ,
இதுவன்றோ விதியின் விளையாட்டு ,
தயவுகூர்ந்து இந்த ஓலங்களை நிற்ப்பாட்டு..!!
உடுத்த உடையில்லை ,
நிற்க நிலமில்லை ,
ஓட பலமில்லை ,
சொந்த நிலத்தில் அகதிகளாக நாங்கள் ,
வந்த இடத்தில் அரண்மனையில் நீங்கள் ,
இதுவன்றோ விதியின் விளையாட்டு ,
தயவுகூர்ந்து இந்த ஓலங்களை நிற்ப்பாட்டு..!!
விலங்கியல் பூங்காவில் கணவன் !!
மான்கள் ஓடுவதை கண்டால்
பயமாய் இருக்கிறது
எனக்கு எப்போது
இராவணன் வருவானென்று !!!!
பயமாய் இருக்கிறது
எனக்கு எப்போது
இராவணன் வருவானென்று !!!!
மன்னித்தது விடு அன்னையே !!
பாலுண்ட முலையதனில் கல்லென்று தெரிந்ததனால் ,
என் செய்வதென்று அறியாமல் ,
திக்கேதும் தெரியாமல் ,
முடங்கிப்போய் கிடக்கின்றேன்.!!
என் வாயின் நஞ்சதனால் ,
ஏதேனும் வந்ததுவோ !!
மன்னித்து விடு நீ என்னை ,
செய்நன்றி மறந்துவிட்டேன் ,,
என் செய்வதென்று நீயே சொல் .?
நீ என்னிடமே வந்துவிடு !!
என்னுடனே இருந்துவிடு!!!
என் செய்வதென்று அறியாமல் ,
திக்கேதும் தெரியாமல் ,
முடங்கிப்போய் கிடக்கின்றேன்.!!
என் வாயின் நஞ்சதனால் ,
ஏதேனும் வந்ததுவோ !!
மன்னித்து விடு நீ என்னை ,
செய்நன்றி மறந்துவிட்டேன் ,,
என் செய்வதென்று நீயே சொல் .?
நீ என்னிடமே வந்துவிடு !!
என்னுடனே இருந்துவிடு!!!
தமிழனின் போராட்டங்கள்
* குடிக்கவே நீரில்லை
கொதிக்கவைக்க கொடுக்கிறான் காஸ் அடுப்பு !!!!
* சில அதிகாரிகள் லஞ்சத்தை தடுத்து
பல மக்களை லஞ்சம் வாங்க வைத்துவிட்டாயே - வாக்களிக்க
* கொடுத்த கலர் டிவியை எதில் பார்ப்பது ..? மூடனே !!!
எடுத்து விட்டாயே மின்சாரத்தை ...!!!!
* இலவசமாய் தருகிறேன் என்று எங்கள் வரிப்பணத்தில் வாழும் உல்லாசவாதிகளே !!!
உங்களுக்கும் வருமா ஏதேனும் காய்ச்சல் !!!
கொதிக்கவைக்க கொடுக்கிறான் காஸ் அடுப்பு !!!!
* சில அதிகாரிகள் லஞ்சத்தை தடுத்து
பல மக்களை லஞ்சம் வாங்க வைத்துவிட்டாயே - வாக்களிக்க
* கொடுத்த கலர் டிவியை எதில் பார்ப்பது ..? மூடனே !!!
எடுத்து விட்டாயே மின்சாரத்தை ...!!!!
* இலவசமாய் தருகிறேன் என்று எங்கள் வரிப்பணத்தில் வாழும் உல்லாசவாதிகளே !!!
உங்களுக்கும் வருமா ஏதேனும் காய்ச்சல் !!!
Friday, January 8, 2010
திருப்தி
முப்பது ரூபாய் பொன்னி பணக்காரனுக்கு கொடுக்காததை ,
இரண்டு ரூபாய் ரேஷன் அரிசி கொடுத்தது ஏழைக்கு ..!!!!
பத்து சவரன் பொன்நகை மாமியாருக்கு கொடுக்காததை ,
பதுசான புன்னகை கொடுத்தது தாய்க்கு ..!!!
இருபது சென்டிமீட்டர் மழை ஆலமரத்துக்கு கொடுக்காததை ,
இளகிய பனிதுளி கொடுத்தது புல்லுக்கு ..!
இரண்டு ரூபாய் ரேஷன் அரிசி கொடுத்தது ஏழைக்கு ..!!!!
பத்து சவரன் பொன்நகை மாமியாருக்கு கொடுக்காததை ,
பதுசான புன்னகை கொடுத்தது தாய்க்கு ..!!!
இருபது சென்டிமீட்டர் மழை ஆலமரத்துக்கு கொடுக்காததை ,
இளகிய பனிதுளி கொடுத்தது புல்லுக்கு ..!
Tuesday, September 15, 2009
பதில் சொல்லடி ?????
கண்களிலே குடியிருந்தேன்
கண்ணீராய் கழுவிவிட்டாய் ???
மூச்சினிலே கலந்து வந்தேன்
தும்மலாய் எனை துரத்திவிட்டாய் ???
காலடியில் நான் கிடந்தேன்
கால் கழுவி ஓடவிட்டாய் ????
உன் இதயத்தில் இனி இருப்பேன்
உயிர் விட்டா எனை அழிப்பாய் ?????????????
கண்ணீராய் கழுவிவிட்டாய் ???
மூச்சினிலே கலந்து வந்தேன்
தும்மலாய் எனை துரத்திவிட்டாய் ???
காலடியில் நான் கிடந்தேன்
கால் கழுவி ஓடவிட்டாய் ????
உன் இதயத்தில் இனி இருப்பேன்
உயிர் விட்டா எனை அழிப்பாய் ?????????????
வகுப்பறை சுகமானது
வகுப்பறை சுகமானது,
தடாகத்தில் தாமரை போல்
சகாக்களுடன் நான் ,
வகுப்பறை சுகமானது
இரவெல்லாம் தூங்கினாலும்
ஆசிரியரின் தாலாட்டு ,
வகுப்பறை சுகமானது
கனாக்களில் நான் கண்டது போல்
கண் முன்னே அவள் புன்சிரிப்பு ,
ஆம் வகுப்பறை சுகமானது
என் செய்வதென்று அறியாது
கவிதை போல் இதை கிறுக்கியது !!!!!!!!!
தடாகத்தில் தாமரை போல்
சகாக்களுடன் நான் ,
வகுப்பறை சுகமானது
இரவெல்லாம் தூங்கினாலும்
ஆசிரியரின் தாலாட்டு ,
வகுப்பறை சுகமானது
கனாக்களில் நான் கண்டது போல்
கண் முன்னே அவள் புன்சிரிப்பு ,
ஆம் வகுப்பறை சுகமானது
என் செய்வதென்று அறியாது
கவிதை போல் இதை கிறுக்கியது !!!!!!!!!
அவலம்
மந்தை மந்தையாய்
மாடுகளை பார்த்திருக்கிறேன் ,
ஆனால் மந்தையாய் மனிதர்களை
இன்று தான் காண்கிறேன் அகதிகள் விடுதியில் ,
எங்கள் நிலத்தில் சுதந்திர ஓலம் ,
நாங்கள் கேட்பது எத்துனை அவலம் ,
வாழத்தான் விடவில்லை ,
நாங்கள் செல்ல வழியாவது விடு !!!!!!!
மாடுகளை பார்த்திருக்கிறேன் ,
ஆனால் மந்தையாய் மனிதர்களை
இன்று தான் காண்கிறேன் அகதிகள் விடுதியில் ,
எங்கள் நிலத்தில் சுதந்திர ஓலம் ,
நாங்கள் கேட்பது எத்துனை அவலம் ,
வாழத்தான் விடவில்லை ,
நாங்கள் செல்ல வழியாவது விடு !!!!!!!
Subscribe to:
Posts (Atom)